Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மே (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் செல்லசாமி, தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர்,
தவெக தலைமையிலான அரசு ஏழை, எளிய மக்களுக்காக திறம்பட செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும், “மக்களுக்கான திட்டங்களை கொண்டு வரும்போது ஆதரவாக இருப்போம். ஆனால் மக்களுக்கு எதிரான விஷயங்கள் நடந்தால் அதற்கு எதிராக குரல் கொடுப்போம்” என்றும் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பல்வேறு கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை பதிவு செய்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த கருத்தும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசுக்கு பல்வேறு கட்சிகள் நிபந்தனை ஆதரவை வெளிப்படுத்தி வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்ற நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam