த.வெ.க. அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என சட்டப்பேரவையில் வெளிப்படுத்தினோம் –எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, 13 மே (ஹி.ச.) எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை சட்டப்பேரவையில் திமுக வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்
உதய


சென்னை, 13 மே (ஹி.ச.)

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை சட்டப்பேரவையில் திமுக வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசு, தற்போது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“தூய சக்தி” என்ற பெயரில் மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி, தற்போது குதிரை பேர அரசியலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பதாக உதயநிதி தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், பொறுப்புகளை தட்டிக்கழிக்கும் நிலைப்பாட்டில் அரசு செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

இதன் காரணமாக, இந்த புதிய அரசு மீது வாக்களித்த மக்களுக்கே நம்பிக்கை குறைந்து வருவதாக கூறிய அவர், “மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால் ‘சோபா அரசியல்’ நடத்தும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P