Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மே (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு வெற்றி பெற்றது.
நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக 144 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், எதிராக 22 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
மேலும் 5 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் நடுநிலையாக இருந்து தீர்மானத்தில் பங்கேற்காமல் தவிர்த்தனர்.
எதிர்ப்பு தெரிவித்த 22 பேரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆவர்.
அதே நேரத்தில், அதிமுகவின் எஸ்பி வேலுமணி அணியைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பாமகவைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் மற்றும் பாஜகவின் ஒரே ஒரு எம்எல்ஏ வாக்கெடுப்பில் நடுநிலையாக இருந்தனர்.
இதன் மூலம், சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவை நிரூபித்துள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆட்சியை முன்னெடுக்க உள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P