Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மே (ஹி.ச.)
முதல்வர் ஜோசப் விஜய்-யின் ஜோதிடராக கூறப்படும் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். ரதி தாக்கல் செய்த மனுவில், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இந்த நியமனம் செய்யப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், “பின்புற வாசல் வழியாக செய்யப்பட்ட இந்த நியமனம் அரசியலமைப்பு சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கும் எதிரானது” என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் அந்த பதவியில் நீடிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், இந்த நியமனத்தை எதிர்த்து வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியும் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
அவரது மனுவையும் வழக்காக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P