Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மே (ஹி.ச.)
தமிழகத்தில் த.வெ.க அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ள நிலையில், அரசியல் சூழல் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
தனியார் பேருந்தில் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதேபோல், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ். சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்,
கொறடா உத்தரவை மீறி செயல்பட்டால் பதவி பறிபோகும் என இபிஎஸ் அணி எச்சரித்த போதும், “நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு சட்டப்பேரவை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வருகையால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam