Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 13 மே (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவங்கூர் கிராமத்தில் வசித்து வரும் சுஜாதா இவரது கணவர் கோவிந்தராஜ் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நிலையில் தனது இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உடன் தனக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று வங்கியில் இருந்து நகைகளை மீட்டு வந்து வீட்டில் வைத்துள்ளார். தொடர்ந்து தனது பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் சுற்றுலா சென்று விட்டு இன்று மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 25 பவுன் தங்க நகை மற்றும் 1.5 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்து உள்ளது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு, தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 25 பவுன் தங்க நகை மற்றும் 1.5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN