விஜய் என்னை காப்பாற்றுவார்! - காமராஜ் ஆதரவு
சென்னை, 13 மே (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தின் போது, அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. காமராஜ், தமிழக வெற்றி கழக அரசுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்
காமராஜ்


சென்னை, 13 மே (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தின் போது, அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. காமராஜ், தமிழக வெற்றி கழக அரசுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர்,

நேற்றே ஆதரவு கொடுத்தேன், இன்றும் கொடுப்பேன், நாளையும் ஆதரவு கொடுப்பேன், ஐந்தாண்டு காலமும் ஆதரவு கொடுப்பேன் என்று தெரிவித்தார்.

மேலும், அவதார தலைவர் நமது முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கும் முதல்வர் என்னையும் காப்பாற்றுவார் என உணர்ச்சிபூர்வமாக பேசியது அவையில் கவனம் ஈர்த்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு ஆளும் தரப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், காமராஜ் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, காமராஜ் ஆதரவு கடிதம் தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போலி கையெழுத்து மற்றும் குதிரை பேரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் பின்னர் காமராஜ் சட்டப்பேரவையிலேயே நேரடியாக ஆதரவு தெரிவித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam