அதிமுகவில் உட்கட்சி பூசல் எதிரொலி - கட்சி தலைமையகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை, 14 மே (ஹி.ச.) சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தைச் சுற்றி சென்னை மாநகர காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த தலைவ
அதிமுக


சென்னை, 14 மே (ஹி.ச.)

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தைச் சுற்றி சென்னை மாநகர காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த தலைவர் சி.வி.சண்முகம் ஆகியோரின் ஆதரவாளர்கள் இடையே அரசியல் பதற்றம் நிலவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. அலுவலகத்திற்குள் எந்தவித அசம்பாவித சம்பவங்களோ அல்லது அத்துமீறல்களோ நடைபெறவில்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தலைமை அலுவலகத்தைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அசாதாரண கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தற்காலிக சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், அவசர சூழ்நிலைகளை சமாளிக்க ‘வஜ்ரா’ உள்ளிட்ட கலவரத் தடுப்பு வாகனங்கள் அலுவலக நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டுள்ளன. அலுவலகப் பகுதிக்குள் செல்லும் நபர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

ராயப்பேட்டை முழுவதும் போலீசார் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அரசியல் பரபரப்பு குறையும் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் நீடிக்கும் என்றும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P