காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு - கரூரில் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வீணாகும் அவலம்
கரூர், 14 மே (ஹி.ச) கரூரிலிருந்து வெள்ளியணை வழியாக திண்டுக்கல் மாவட்டம் வரை ராட்ச குழாய் பதிக்கப்பட்டுள்ளது. கரூர் காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீருக்காக ராட்ச குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
Cauvery Integrated Drinking Water Pipeline Bursts


கரூர், 14 மே (ஹி.ச)

கரூரிலிருந்து வெள்ளியணை வழியாக திண்டுக்கல் மாவட்டம் வரை ராட்ச குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

கரூர் காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீருக்காக ராட்ச குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

வெள்ளியணை பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய் இன்று காலை 7 மணியளவில் திடீரென உடைந்தது.

இதனால் சீறிப் பாய்ந்த குடிநீர் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உய்வபிக்ஜனம் வபவ்ய் காவிரி ஆற்றில் இருந்து கரூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய் உடைந்ததே இதற்கு காரணம் என தெரியவந்தது.

தொடர்ச்சியாக வெளியேறிய குடிநீரால் சாலையில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் தேங்கியதுடன் இருசக்கர வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

சுமார் 2 மணி நேரம் தண்ணீர் வீணானதால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் விரயமானதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் காவிரி கரையில் உள்ள பம்பிங் ஸ்டேஷனில் நீர் உந்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டது.

தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் பராமரிப்பு பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

உடைந்த குழாயின் இருபுறமும் அடைப்பு ஏற்படுத்தி நீர் வரத்தை நிறுத்திய அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்கியுள்ளனர்.

கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் இதுபோன்ற குழாய் உடைப்புகளால் தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்றும் பழைய குழாய்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாலைக்குள் சீரமைப்பு பணிகள் முடிந்து குடிநீர் விநியோகம் சீராகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b