Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 14 மே (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்த நிலையில், இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இருந்தபோதும், கடந்த சில தினங்களாக மழையின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருவதால் அருவிகள் மற்றும் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள சிற்றருவி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்த நிலையில், தற்போது சிற்றருவியானது கால வரையறையின்றி மூடப்பட்டதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தண்ணீர் வரத்து குறைந்ததன் காரணமாக இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளதாகவும், மழை பொழிந்து தண்ணீர் வரத்து அருவியில் அதிகரிக்கும் பட்சத்தில் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN