Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மே (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் விதிமுறைகளை மீறி வாக்களித்ததாக, ஒரு பெண் உட்பட 17 வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினரை சென்னை மற்றும் மதுரை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்ற இவர்கள், தேர்தலில் வாக்களித்துவிட்டு மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற போது சிக்கினர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ரகசிய அறிவுறுத்தலின்படி, விமான நிலையங்களில் பயணிகளின் விரல்களில் வாக்கு மை உள்ளதா என குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில் சென்னை விமான நிலையத்தில் 15 பேரும், மதுரை விமான நிலையத்தில் 2 பேரும் சிக்கியுள்ளனர்.
இவர்களின் விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வாக்காளர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இருந்ததா அல்லது ஆள் மாறாட்டம் செய்து வாக்களித்தார்களா என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தேர்தல் ஆணைய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P