அதிமுக சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளர் ஜவஹர் அலி அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு
சென்னை, 14 மே (ஹி.ச.) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முஸ்லிம்களுக்கு அங்கீகாரம் கொடுக்க விரும்புவது இல்லை என குற்றம் சாட்டியுள்ள அக்கட்சி செய்தி தொடர்பாளர் சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளர் ஜவஹர் அலி அதிமுகலிருந்து விலகுவதாக அறிவி
announces his resignation from


சென்னை, 14 மே (ஹி.ச.)

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முஸ்லிம்களுக்கு அங்கீகாரம் கொடுக்க விரும்புவது இல்லை என குற்றம் சாட்டியுள்ள அக்கட்சி செய்தி தொடர்பாளர் சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளர் ஜவஹர் அலி அதிமுகலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜவஹர் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. பணம் பகட்டு காட்டுபவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் கொடுக்கிறார் எடப்பாடியார். குறிப்பாக முஸ்லிம்களுக்கு சிறிதளவு கூட அங்கீகாரம் கொடுக்க எடப்பாடியார் விரும்புவது இல்லை.

முஸ்லிம்கள் முழுமையாக புறக்கணிக்கப்படுகிறார்கள். எனவே, கட்சியில் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை, கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விலகுகிறேன்.

எனக் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b