இன்று முதல் அமுல் பால் விலை ரூ.2 உயர்வு உற்பத்தி செலவு அதிகரிப்பால் நடவடிக்கை
புதுடெல்லி, 14 மே (ஹி.ச.) குஜராத் அரசின் கூட்டுறவு நிறுவனமான அமுல் தயாரிக்கும் பால் மற்றும் பால் பொருட்கள் நாடு முழுவதும் விற்பனையாகி வருகின்றன. இந்த நிலையில், அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று முத
G


புதுடெல்லி, 14 மே (ஹி.ச.)

குஜராத் அரசின் கூட்டுறவு நிறுவனமான அமுல்

தயாரிக்கும் பால் மற்றும் பால் பொருட்கள் நாடு முழுவதும் விற்பனையாகி வருகின்றன.

இந்த நிலையில், அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

பால் உற்பத்தி மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்ததன் காரணமாகவே இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கால்நடை தீவனம், எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகளில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த விலை உயர்வு லிட்டருக்கு 2.5 முதல் 3.5 சதவீதம் வரை மட்டுமே இருப்பதாகவும், இது நாட்டின் சராசரி உணவுப் பொருட்களின் விலை உயர்வை விட குறைவானது என்றும் அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA