Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 14 மே (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தில் பொண்ணுகண்ணு என்பவர் வசித்து வருகிறார்.
இவருக்கு சொந்தமான பாக்கம் புதூர் கிராம எல்லையில் சுமார் 3 ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பு பயிர் செய்து விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கரும்பு பயிரை காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாய நிலத்தை சுற்றியும் கரும்பு பயிரை பாதுகாக்க மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.
இவர் வழக்கம் போல் விவசாய நிலத்திற்கு சென்றபோது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பொண்ணுகண்ணு உயிரிழந்துள்ளார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உறவினருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினருடன் விரைந்து சென்றனர்.
பின்னர் பொண்ணு கண்ணு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வடபொன்பரப்பி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN