சூர்யா நடித்திருக்கும்'கருப்பு' திரைப்படத்தின் காலை 9 மணி காட்சி ரத்து!
சென்னை, 14 மே (ஹி.ச.) நடிகர் சூர்யா நடித்தும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கியும் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படம், இன்று ரசிகர்களை சந்த
Karuppu


சென்னை, 14 மே (ஹி.ச.)

நடிகர் சூர்யா நடித்தும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கியும் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படம், இன்று ரசிகர்களை சந்திக்கிறது.

சமூக கருத்துகளும், வித்தியாசமான கதைக்களமும் கொண்ட இந்தப் படம் குறித்து கடந்த சில வாரங்களாகவே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

குறிப்பாக சூர்யாவின் புதிய தோற்றம், படத்தின் முன்னோட்ட காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், ‘கருப்பு’ திரைப்படம் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை திரையுலக வட்டாரங்களில் உருவாகி இருந்தது.

தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசிடம் அனுமதி பெறப்பட்டிருந்தது.

சில இடங்களில் பேனர்கள்,

கட்-அவுட்கள், பட்டாசுகள் மற்றும் மேளதாளங்களுடன் ரசிகர்கள் உற்சாகமாக காத்திருந்தனர்.

ஆனால், ‘கருப்பு’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் கடும் ஏமாற்றமடைந்தனர்.

நீண்ட நாட்களாக காத்திருந்த படத்தின் முதல் காட்சியை காண முடியாததால் சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.

ஜஸ்வந்த் பண்டாரி என்பவருக்கு படத்தின் தயாரிப்பு நிறுவனம் பணம் கொடுக்க வேண்டியதாக கூறப்படும் காரணத்தால் இருந்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு,

தவிர்க்க முடியாத காரணங்களால் கருப்பு திரைப்படத்தின் 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.

அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம், என குறிப்பிட்டுள்ளார்.

பல தடைகளைத் தாண்டி இன்று வெளியாகும் ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பது குறித்து திரையுலகமும், ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN