தமிழக காவல்துறையில் முக்கிய அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை, 14 மே (ஹி.ச.) தமிழக காவல்துறையில் உயர்மட்ட அதிகாரிகள் பலருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு அரசு புதிய பணியிட மாற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த மாற்றம் காவல்துறையின் நிர்வாக மற்றும் உளவுத்துறை அமைப்புகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படு
Vijay


Jj


சென்னை, 14 மே (ஹி.ச.)

தமிழக காவல்துறையில் உயர்மட்ட அதிகாரிகள் பலருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு அரசு புதிய பணியிட மாற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த மாற்றம் காவல்துறையின் நிர்வாக மற்றும் உளவுத்துறை அமைப்புகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

அதன்படி, இதுவரை காத்திருப்பு பட்டியலில் இருந்த டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதன், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களின் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீண்டநாளாக புதிய பொறுப்பு வழங்கப்படாமல் இருந்த அவருக்கு தற்போது முக்கிய நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

மேலும், தமிழக உளவுத்துறையின் முன்னாள் ஐ.ஜி. ஆக பணியாற்றிய செந்தில்வேலன், தமிழ்நாடு காவல்துறை அகாடமியின் கூடுதல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

காவல்துறையினருக்கான பயிற்சி மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்புப் பணிகளை அவர் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், தமிழ்நாடு காவல்துறை அகாடமியின் புதிய டி.ஜி.பி. ஆக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், காவல்துறை பயிற்சி அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அண்மையில் காவல்துறை மற்றும் உளவுத்துறை அமைப்புகளில் தொடர்ந்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய அதிகாரி நியமனங்களும் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளன.

Hindusthan Samachar / P YUVARAJ