தவெக ஆட்சியில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 வரவு வைப்பு
சென்னை, 14 மே (ஹி.ச.) தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் படித்து, அரசுக் கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த 1000 ரூபாய் உதவித் தொகை இந்த மாதமும் வரவு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக
முதலமைச்சர்


சென்னை, 14 மே (ஹி.ச.)

தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் படித்து, அரசுக் கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த 1000 ரூபாய் உதவித் தொகை இந்த மாதமும் வரவு வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வந்த 1000 ரூபாய் உதவித் தொகையும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித்தொகை 1000 ரூபாயும் இந்த மாதத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சிகளில் கொடுக்கப்பட்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், இன்று உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் தேர்தலை ஒட்டி மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்த பாஜக முட்டுக்கட்டை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, அப்போதைய முதல்வர் ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை, முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை 3 மாதங்களுக்கு சேர்த்து வரவு வைத்தார்,என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P