அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் - ஜோலார்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. கே.சி.வீரமணி!
திருப்பத்தூர், 15 மே (ஹி.ச.) திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளராரும், முன்னாள் அமைச்சரும், தற்போதைய ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.வீரமணி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்ததால், அவரை திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து
ADMK MLA KC Veeramani


திருப்பத்தூர், 15 மே (ஹி.ச.)

திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளராரும், முன்னாள் அமைச்சரும், தற்போதைய ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.வீரமணி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்ததால், அவரை திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அவருக்கு பதில் அந்த பதவில் அதிமுக மாநில மருத்துவ அணி துணைச் செயலாளராக இருந்த பசுபதி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் கே.சி.வீரமணி தலைமையில் அதிமுக ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய கே.சி.வீரமணி,

21 ஆண்டுக் காலம் நான் அதிமுகவில் பயணித்து, மாவட்ட செயலாளராக இருந்தேன். அமைச்சர் பதவிலும், கட்சியில் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளேன். தற்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணத்தினால், திமுகவுடன் கூட்டணி என நெருப்பில் குதிக்க சொன்னார் நம்முடைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதனால் எனக்கு மன வருத்தம் ஏற்பட்டது.

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் டெபாசிட் கூட நாம் பெறவில்லை. இந்நிலையில், எம்.எல்.ஏ பதவியை வைத்துக் கொண்டு வீட்டில் அமர்ந்திருக்க எனக்கு மனம் இல்லை. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும், ஆளும் கட்சியுடன் சேர்ந்தால் தான் ஏதாவது செய்ய முடியும் என்ற எண்ணத்திலும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தேன்” என கூறினார்.

மேலும், உயிருள்ள வரை நான் அதிமுக தான், என்னுடைய சின்னம் இரட்டை இலை, என்னுடைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். தவெகவுக்கு ஆதரவு அளித்தால் என்னை கட்சி பதவியிலிருந்து நீக்குவார் என எனக்கு தெரியும், தெரிந்தே தான் இந்த முடிவை எடுத்தேன். நான் என்றைக்கும் அதிமுகவினருடன் பயணிப்பேன் என்றார்.

நிறைவாக, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளருடன் அனைத்து நிர்வாகிகளையும் பயணிக்க கோரிய அவர், தானும் ஒரு தொண்டனாக கட்சியை வளர்க்க பணி செய்வேன் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN