Enter your Email Address to subscribe to our newsletters

அனந்தபுரம், 15 மே (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தின் ஒருங்கிணைந்த அனந்தபுரம் மாவட்ட வரலாற்றையே மாற்றக்கூடிய மிகப்பெரிய திட்டமாக ஏஎம்சிஏ ஸ்டெல்த் போர் விமான திட்டம் அமையும் என்று மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் அரிவித்தார்.
புத்தபர்த்தியில் நடைபெற்ற ஏஎம்சிஏ ஸ்டெல்த் போர் விமான திட்டத்தின் பூமிபூஜை நிகழ்ச்சியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் அமைச்சர் லோகேஷ் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஒருகாலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனந்தபுரம் மாவட்டத்தில் கியா கார் தொழிற்சாலையை கொண்டு வந்தது முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்கு பார்வை. இன்று அதே மண்ணில் ஸ்டெல்த் போர் விமானங்கள் பறக்கவிருக்கின்றன.
கடந்த தேர்தலில் ஒருங்கிணைந்த அனந்தபுரம் மாவட்டத்தில் 14 தொகுதிகளிலும் என்.டி.ஏ. கூட்டணியை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு ‘ரிட்டர்ன் கிப்ட்’ ஆக இந்த திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அருளால் புத்தபர்த்தி இந்திய பாதுகாப்புத்துறையின் முக்கிய மையமாக மாறப்போகிறது.
“நமோ கூட்டணியால் முதலீடுகள்”பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் இணைந்த முயற்சியால் ஆந்திர மாநிலத்திற்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் கிடைத்து வருகின்றன.
கூகுள் டேட்டா சென்டர், ஆர்சிலர் மிட்டல் முதலீடுகளுக்கு தொடர்ந்து தற்போது ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஏஎம்சிஏ திட்டமும் மாநிலத்திற்கு வந்துள்ளது.
போலவரம் திட்டம், அமராவதி வளர்ச்சி, விசாகப்பட்டினம் எஃகு ஆலை பாதுகாப்பு, ரெயில்வே மண்டலம், கர்னூலில் உயர்நீதிமன்ற கிளை உள்ளிட்டவை மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பால் சாத்தியமானவை.
வேலைவாய்ப்புகள்டி.ஆர்.டி.ஓ., ஏ.டி.ஏ., ஹெச்.ஏ.எல். போன்ற பாதுகாப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 5-வது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன.
மேலும் பாரத் போர்ஜ், பாரத் டைனமிக்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் முதலீடு செய்ய இருப்பதால் ராயலசீமா பகுதி இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும்.
“கியா தொழிற்சாலை வந்த பிறகு அனந்தபுரம் வளர்ச்சி பெற்றது போல, இப்போது ஏஎம்சிஏ திட்டத்தின் மூலம் மாவட்டம் வளர்ச்சியில் முதலிடத்தை அடையும்” என்று அமைச்சர் லோகேஷ் கூறினார்.
எதிர்க்கட்சிகள் மீது தாக்குபேச்சின் இறுதியில் எதிர்க்கட்சிகளை விமர்சித்த அமைச்சர் லோகேஷ், “அவர்களுக்கு பின்னணி என்றால் பகைமை அரசியல். நமக்கு பின்னணி என்றால் போர் விமான திட்டம்.
அவர்களுக்கு கடத்தல் பின்னணி, நமக்கு கியா தொழிற்சாலை பின்னணி. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது” என்று தாக்கமாக பேசினார்.
இந்த திட்டத்தை ஆந்திர மாநிலத்திற்கு ஒதுக்கிய பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA