Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 15 மே (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்ம கருத்துக்கு ஆதரவாக பேசியது தொடர்பாக, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து” என்ற பழைய தமிழ் காமெடியை குறிப்பிட்டு, ஆதவ் அர்ஜுனா தற்போது எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதையே மறந்துவிட்டாரோ என அண்ணாமலை தனது சமூக வலைதள பதிவில் விமர்சித்தார்.
மேலும், திமுகவினரே இவ்வளவு தீவிரமாக ஆதரவு தெரிவிக்காத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்களை ஆதவ் நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அதேபோல், “வடஇந்தியாவில் சனாதன தர்மம் இந்து மதத்துடன் இணைத்து பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அதையே சமத்துவமின்மை என மறுவரையறை செய்வது ஏன்?” என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
Hindusthan Samachar / GOKILA arumugam