Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே (ஹி.ச.)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று நகைப் பிரியர்களுக்கு சற்றே நிம்மதி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
மத்திய அரசு, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியதைத் தொடர்ந்து, தங்கம் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் கடும் ஏற்றத்தாழ்வுகள் நிலவி வந்தன.
நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.400 உயர்ந்து ரூ.1,20,400-க்கு விற்பனையான நிலையில், இன்று (மே 15) சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.14,950 ஆக உள்ளது.
அதேபோல், வெள்ளி விலையும் சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.305-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.3,05,000 ஆக விற்பனையாகிறது.
தங்கத்தின் தொடர்ச்சியான விலை உயர்வு சாமானிய மக்களிடையே கவலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்றைய விலை குறைவு நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு சற்றே ஆறுதலாக அமைந்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P