கோவில்பட்டி புத்தக திருவிழா இன்று முதல் தொடக்கம்
கோவில்பட்டி, 15 மே (ஹி.ச.) தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம்,கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் புத்தகத் திருவிழா கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள விஷ்வா மீட்டிங் ஹாலில் தொடக்க விழா இன்று நடை
Kovilpatti Book Festival Begins Today


கோவில்பட்டி, 15 மே (ஹி.ச.)

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம்,கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் புத்தகத் திருவிழா கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள விஷ்வா மீட்டிங் ஹாலில் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

கோவில்பட்டி புத்தக திருவிழா மே15 முதல் 26ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.

புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்வுக்கு ஜே.சி.ஐ தலைவர் ரகுபதி தலைமை வகித்தார்.புத்தக கண்காட்சியினை கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹுமான்சூ மங்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் புத்தக திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் புத்தகங்களையும் கோவில்பட்டி சார் ஆட்சியர் வழங்கி வாழ்த்தினார்.

இத்திருழாவில் நாவல் வாழ்க்கை வரலாறு மருத்துவம் இலக்கியம் குழந்தைகளுக்கான புத்தகங்கள் போட்டி தேர்வு நூல்கள் அறிவியல் உள்ளிட்ட பத்தாயிரம் தலைப்புகளில் ஒரு லட்சம் புத்தகங்கள் உள்ளன.இதில் விற்பனையாகும் அனைத்து புத்தகங்களுக்கும் 10% சதவீத தள்ளுபடி உண்டு.

நீங்கள் விரும்பும் ஓவியம் எனும் தலைப்பில் எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஓவிய போட்டியும்,புத்தகம் என்ன செய்யும் எனும் தலைப்பில் கட்டுரை போட்டியும்,திருக்குறள் எழுதும் போட்டியும் 6ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடைபெறும்.இதில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகமும் பரிசாக வழங்கப்படும்.

ரூ 1,000 க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு வாசிப்பு செம்மல் சான்றிதழும், ரூ 2,000 க்கு புத்தகம் வாங்குவோருக்கு வாசிப்பு சிகரம் சான்றிதழும் வழங்கப்படும்.

புத்தக கண்காட்சிக்கு வருகை தரும் வாசகர்களில் குலுக்கல் முறையில் மூன்று நபரை தேர்வு செய்து புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும் என நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b