ரூ.2500 மகளிர் உரிமைத் திட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் - அமைச்சர் கீர்த்தனா உறுதி
சிவகாசி, 15 மே (ஹி.ச.) மகளிர் உரிமை தொகை ரூ.2500 திட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீர்த்தனா, முன்னாள் அரசு ரூ.10.5 லட்சம் கோடியை “கழுவி எடுத்துச் சென்றுவிட
கீர்த்தனா


சிவகாசி, 15 மே (ஹி.ச.)

மகளிர் உரிமை தொகை ரூ.2500 திட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீர்த்தனா,

முன்னாள் அரசு ரூ.10.5 லட்சம் கோடியை “கழுவி எடுத்துச் சென்றுவிட்டது” என்று கடுமையாக குற்றம்சாட்டினார். அரசின் நிதிநிலை குறித்து முழுமையான ஆய்வு நடத்தி, அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்க சிறிது கால அவகாசம் வழங்கினால் மட்டுமே 2500 ரூபாய் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், “கொஞ்சம் நேரம் கொடுத்தீர்கள் என்றால் கண்டிப்பாக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். மகளிர் உரிமைத்தொகை அனைத்து தாய்மார்களுக்கும் வழங்கப்படும். எங்களுக்கு தற்போது தேவை கால அவகாசம் மட்டுமே” என கூறினார்.

மகளிருக்கு வழங்கப்பட்ட இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக சிலர் திட்டமிட்டு புரளி பரப்பி வருவதாகவும், அரசு ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதியையும் கட்டம் கட்டமாக நிறைவேற்றி வருவதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “நாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் இவ்வளவு கேள்வி கேட்பது நியாயமற்றது” என்றும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam