Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே (ஹி.ச.)
2026 மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் (NEET UG) தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மறுதேர்வு வரும் ஜூன் 21, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தேசியத் தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.
வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசின் ஒப்புதலுடன் இந்த மறுதேர்வு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என்றும், பழைய விண்ணப்பப் பதிவுகளே செல்லுபடியாகும் என்றும் NTA விளக்கம் அளித்துள்ளது.
மேலும், மறுதேர்வுக்காக மாணவர்கள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மே மாதம் நடைபெற்ற தேர்விற்காக செலுத்தப்பட்ட தேர்வு கட்டணத்தை திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மறுதேர்வுக்கான புதிய ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது neet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொள்ளலாம் என NTA தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ