Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 மே (ஹி.ச.)
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தேசிய தேர்வுகள் முகமை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
புனேவில் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தேசிய தேர்வுகள் முகமை அதிகாரிகளிடமிருந்து கேள்வித்தாள்கள் பெறப்பட்டதாக அவர் கூறியுள்ளதாக சிபிஐ தெரிவித்தது.
இதன் அடிப்படையில், மேலும் யார் யாருக்கு இந்த மோசடியில் தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், வினாத்தாள் கசிவில் அரசு பணியாளர்கள் தொடர்புடையவர்களா என்பதையும் சிபிஐ விசாரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட ஒருவரிடம் இருந்து 21 வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மகாராஷ்டிராவில் இருந்து மேலும் 2 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
அவர்களை காவலில் எடுக்க இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P