நீட் மறுதேர்வு நடத்தும் முடிவை கைவிடுக..! பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, 15 மே (ஹி.ச.) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிட்டு, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை மாநில அரசுகளே மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ப
முதலமைச்சர் பிரச்சாரம்


சென்னை, 15 மே (ஹி.ச.)

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிட்டு, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை மாநில அரசுகளே மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறப்பட்டுள்ளதாவது,

நீட் தேர்வில் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகள், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய அவர், நீட் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கோச்சிங் மையங்களை மையமாகக் கொண்ட பணக்காரர்களுக்கான தேர்வாக நீட் மாறிவிட்டதாகவும், அரசுப் பள்ளி மற்றும் முதல் தலைமுறை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026-27 கல்வியாண்டிற்கான நீட் தேர்வை ரத்து செய்து, தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் அவசர திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P