பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்கள் மீது கூடுதல் சுமை - ராகுல் காந்தி கண்டனம்
புதுடெல்லி, 15 மே (ஹி.ச.) நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு இன்று அதிரடியாக உயர்த்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்
A


புதுடெல்லி, 15 மே (ஹி.ச.)

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு இன்று அதிரடியாக உயர்த்தியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

இதற்கிடையில், மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர் காரணமாக கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டது.

அதேவேளை, 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்று வந்த காரணத்தால் எரிபொருள் விலை உயர்த்தப்படாமல் இருந்ததாக கூறப்பட்டது.

தற்போது தேர்தல் நிறைவடைந்த நிலையில் மத்திய அரசு விலையை உயர்த்தியுள்ளது.

இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல்

ரூ.103.98-க்கும், டீசல் ரூ.95.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த திடீர் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த விலை உயர்வுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

மோடி அரசின் தவறுக்கு பொதுமக்கள் விலை கொடுக்கின்றனர்.

பெட்ரோல், டீசல் லிட்டருக்கு தலா ரூ.3 உயர்வு என்ற அதிர்ச்சி ஏற்கனவே வந்துவிட்டது.

மீதமுள்ள தொகையை தவணை முறையில் வசூலிப்பார்கள் என்று விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA