Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 மே (ஹி.ச.)
இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்க புள்ளிவிவரங்களை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.
பொருட்களின் மொத்த விற்பனை விலையில் ஏற்படும் மாற்றங்களை கணக்கிட்டு அதன் அடிப்படையில் பணவீக்க விகிதம் அறிவிக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்திற்கான மொத்த விற்பனை விலை பணவீக்கம் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது கடந்த 42 மாதங்களில் பதிவான மிக அதிகமான பணவீக்கமாகும்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் மொத்த விற்பனை விலை பணவீக்கம் 3.88 சதவீதமாக இருந்தது.
தற்போது அது ஏப்ரல் மாதத்தில் 8.3 சதவீதமாக உயர்ந்திருப்பது பொருளாதார வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதன் தாக்கமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளும் அதிகரித்துள்ளன. இதுவே மொத்த விற்பனை விலை பணவீக்கம் உயர்வதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மேலும், பணவீக்கம் அதிகரித்ததன் விளைவாக காய்கறிகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.
இதனால் பொதுமக்கள் கூடுதல் பொருளாதார சுமையை சந்தித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA