பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்
சென்னை, 15 மே (ஹி.ச) பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளதாகவும், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும் என்று அம்மா
TTV Dhinakaran


Hh


சென்னை, 15 மே (ஹி.ச)

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளதாகவும், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,

உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 மற்றும் இயற்கை எரிவாயு விலை ரூ.2 உயர்த்தப்பட்டு, நேற்று நள்ளிரவு முதல் புதிய விலை அமலுக்கு வந்துள்ளது.

வளைகுடா நாடுகளில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்புகள் காரணமாக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாக இருந்தாலும், அதன் தாக்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொதுமக்களை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொதுப் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதுடன், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து பொருளாதார சுமை அதிகரிக்கும் என்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ