Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே (ஹி.ச.)
சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர் அருகே காரப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபலமான ஐடி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் இன்று
(15-05-26) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் லேசாக பற்றிய தீ, சிறிது நேரத்தில் அந்த கட்டடம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
இந்த தீ விபத்து காரணமாக அவசர அவசரமாக ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர், அந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b