தகாத உறவு கொலையில் முடிந்த சோகம் -கள்ள காதலனை அடித்து கொலை செய்த கள்ள காதலி உட்பட மூவர் கைது !
மதுரை, 15 மே (ஹி.ச.) மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅருகே உள்ள சின்னமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வைரமணி (46) இவர் அந்த பகுதியிலுள்ள செங்கல் சூளையில் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜாஸ்மின் (40) என்ற மனைவியும் இரு மகன்கள் உள்ள
T


மதுரை, 15 மே (ஹி.ச.)

மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅருகே உள்ள சின்னமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வைரமணி (46) இவர் அந்த பகுதியிலுள்ள செங்கல் சூளையில் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு ஜாஸ்மின் (40) என்ற மனைவியும் இரு மகன்கள் உள்ள நிலையில் மனைவி குழந்தைகள் கேரளாவில் வேலை செய்து கொண்டு அங்கேயே வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வைரமணி மட்டும் வாடிப்பட்டிஅருகே உள்ள தனியார் செங்கல் சூளையில் தங்கி பணி புரிந்து வந்தார்.

அப்போது அங்கு பணி புரிந்து வந்த காட்டுராணி (38) என்பவருடன் வைரமணிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ள காதலாக மாறியது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். மேலும்

பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவாக சென்று சுற்றி திரிந்து வந்தனர்.

இது காட்டுராணி குடும்பத்திற்கு தெரியவந்ததை தொடர்ந்து தனது கணவரை மனைவி மற்றும் 17 வயது மகன் ஆகியோர் கண்டித்துள்ளனர்.

இதனால் காட்டுராணி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார், வைரமணியிடம் பேசுவதையும் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு காட்டுராணியை செல்போனில் தொடர்பு கொண்ட வைரமணி ஆண்டிபட்டி பங்களா அருகே உள்ள ஆற்றங்கரையோரம் உன்னை பார்க்க வேண்டும் தனிமையில் சந்திக்க வேண்டுமென வரச் சொல்லி உள்ளார்

காட்டுராணி அதற்கு மறுக்கவே வரவில்லையென்றால் உன் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

பயந்து போன காட்டுராணி நடந்த சம்பவத்தை மகனிடம் தெரிவித்து தனியாக வைர மணியை சந்திக்க ஆற்றங்கரையோரம் சென்றார்.

அப்போது அங்கு சென்ற காட்டுராணியின் 17 வயது மகன் மற்றும் ஹரிதரன் (20) என்ற இருவரும் வைரமணியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கி அடித்தே கொலை செய்து விட்டு வைரமணி உடலை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடினர் .

இதுகுறித்து

தகவலறிந்த வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த வைரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்

இதில் அவரது கள்ளகாதலி காட்டுராணி, மகன் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது மேலும் கொலையாளிகள் தலைமாறாகி இருப்பதும் தெரிந்தது

இதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் கொலை செய்த

காட்டுராணி, அவரது 17 வயது மகன் மற்றும் உறவினர் ஹரிதரன் உட்பட மூவரைகைது செய்தனர்.

தாயின் தகாத உறவை கைவிட மறுத்த கள்ள காதலனை அடித்து கொலை செய்த சம்பவம் வாடிப்பட்டி

பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA