Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே (ஹி.ச.)
தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களில் இன்று இடியுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதேபோல், நீலகிரி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அரபிக் கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
அரபிக் கடலில் அடுத்தடுத்து இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட தகவலில், வரும் 17-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, வரும் 24-ஆம் தேதி வாக்கில் தெற்கு அரபிக் கடல் பகுதியில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த வானிலை மாற்றங்களால் கடலோர பகுதிகளில் மழை செயல்பாடு அதிகரிக்கக்கூடும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்லும் முன் வானிலை அறிவிப்புகளை கவனமாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த அமைப்புகள் வலுப்பெறும் நிலை மற்றும் அவற்றின் நகர்வு தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P