Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 16 மே (ஹி.ச.)
அதிமுகவில் உட்கட்சி பரபரப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என எதிர் அணியினர் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்காக அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று எதிர் அணியில் உள்ள எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்காக பொதுக்குழு உறுப்பினர்களை நேரில் சந்தித்து கையெழுத்து பெறும் பணியிலும் எதிர் அணியினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்களிடம்,
எந்த ஆவணத்திலும் கையெழுத்து போட வேண்டாம் என வலியுறுத்தி வருவதாக கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam