திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
திருப்பதி, 16 மே (ஹி.ச.) திருமலை ஏழுமலையான் கோவில் பகுதியில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகமும் ஆந்திராவும் உட்பட பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், சாமி தரிசனம் செய்ய திரளாக பக்தர்கள் திர
A


திருப்பதி, 16 மே (ஹி.ச.)

திருமலை ஏழுமலையான் கோவில் பகுதியில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகமும் ஆந்திராவும் உட்பட பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், சாமி தரிசனம் செய்ய திரளாக பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருகின்றனர்.

இதனால் திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாராயணகிரி தோட்டத்தில் உள்ள ஜெர்மன் செட் கொட்டகைகளில் பக்தர்கள் நிரம்பி வழிந்தன.

மேலும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி, சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாதகங்கையம்மன் கோவில் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் இடைவிடாமல் குடிநீர், டீ, காபி மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கினர்.

தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட ‘டைம் ஸ்லாட்’ டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA