Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 16 மே (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது முகாம் அலுவலகத்தில் போலவரம் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களை
சந்தித்துநான்காவது கட்டமாக ரூ.306.61 கோடி நிவாரணமும், மறுவாழ்வு (R&R) தொகுப்பும் வழங்கினார்.
மேலும், மறுவாழ்வு குடியிருப்புகளில் கட்டப்பட்ட வீடுகளின் சாவிகளை பல பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர் தெரிவித்ததாவது,
போலவரம் திட்டப் பணிகளில் தங்கள் அரசுக்கு முழுமையான நேர்மை மற்றும் உறுதி உள்ளதாக தெரிவித்தார்.
இடம்பெயர்ந்தோரின் நலனில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
சர் ஆர்தர் காட்டன் பிறந்தநாளில் இந்நிவாரணம் வழங்கப்படுவது மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கூட்டணி அரசு பதவியேற்ற 23 மாதங்களில் 29,936 இடம்பெயர்ந்தோருக்கு சுமார் ரூ.2,250 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திட்டத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகள் இழப்பை சந்திக்கக் கூடாது என்பதே எனது நோக்கம்.
அதற்காகவே போலவரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2027-ம் ஆண்டில் நடைபெறும் புஷ்கர விழாவுக்கு முன்பாகவே திட்டத்தை முடித்து நாட்டுக்கு அர்ப்பணிப்போம்.
முந்தைய அரசின் அலட்சியத்தால் திட்டம் தாமதமானதாகவும், டயாப்ரம் சுவர் சேதமடைந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
திட்டத்தை பாதித்த நிலைமையிலிருந்து மீட்டெடுத்து மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு வந்துள்ளோம். இடம்பெயர்ந்தோரில் ஒருவருக்கும் அநீதி நடைபெறாது.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பழங்குடியினர் பகுதிகளில் ஒவ்வொரு குடும்பத்தின் வருமானத்தையும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரம்பச்சோடவரம் மற்றும் போலவரம் தொகுதிகள் முழுமையாக மேம்படுத்தப்படும்,
என்று தெரிவித்தார்.
இந் நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் நிம்மல ராமானாயுடு, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA