Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி, 16 மே (ஹி.ச.)
தமிழ் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்றதையொட்டி, பவன் கல்யாணும் தனியாக போட்டியிட வேண்டும் என்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவின.
இதற்கு பதிலளித்த பவன் கல்யாண், விஜயுடன் எனக்கு ஒப்பீடு இல்லை. நான் முன்பு தனியாக 2 இடங்களில் போட்டியிட்டபோது தோல்வியடைந்தேன்.
அதனால் கூட்டணியுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூறினார்.
இது குறித்து,ஒய்எஸ்ஆர்சிபி மூத்த தலைவர் அம்பட்டி ராம்பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார்,
அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
பவன் கல்யாண் தனது கட்சியை முதல்வராக ஆகவே தொடங்கவில்லை.
வேறொருவரை முதல்வராக்கவே தொடங்கினார் என்பது எங்களுக்கு முன்பே தெரியும்.
தற்போது அது மக்களுக்கும் தெளிவாகிறது.
மேலும், தனது தோல்வியையும் கூட்டணியின் அவசியத்தையும் பவன் கல்யாண் ஒப்புக்கொண்டது, அவரது அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் விமர்சனம் செய்துள்ளார்.
இந்த விவகாரம் ஆந்திரப் பிரதேச அரசியலில் மீண்டும் கடும் வார்த்தைப் போருக்கு வழிவகுத்துள்ளது,என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA