ஆந்திராவில் பயங்கர வாகன விபத்து - 4 பெண்கள் உயிரிழப்பு
ஆந்திரா, 16 மே (ஹி.ச.) காகிநாடா ரூரல் பகுதிக்குட்பட்ட கொவ்வூர் பாலம் அருகே இன்று காலை ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சீடகா கிராமத்தை சேர்ந்த பெண்கள் வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணிக்குச் செல்ல கால்நடையாக சாலையை கடந
A


ஆந்திரா, 16 மே (ஹி.ச.)

காகிநாடா ரூரல் பகுதிக்குட்பட்ட கொவ்வூர் பாலம் அருகே இன்று காலை ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சீடகா கிராமத்தை சேர்ந்த பெண்கள் வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணிக்குச் செல்ல கால்நடையாக சாலையை கடந்து சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது காகிநாடா நோக்கி அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, அவர்களை பலத்த வேகத்தில் மோதியது. இதில் சத்தியவதி, கிருஷ்ணவேணி, சிட்டெம்மா, அன்னவரம் ஆகிய 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து ஏற்பட்டவுடன் லாரி ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 2 பெண்கள் காகிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஆந்திரப் பிரதேச மாநில ஐ.டி. மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் ஆழ்ந்த அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

வாழ்வாதாரத்திற்காக பணிக்கு சென்ற பெண்கள் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிப்பதாக அவர் கூறினார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர், அரசு முழுமையான உதவி வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காகிநாடா ரூரல் போலீசார் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA