செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக அருண் தம்புராஜ் இன்று பதவியேற்பு
சென்னை, 16 மே (ஹி.ச.) தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநராகபணியாற்றி வந்த வைத்த
செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக அருண் தம்புராஜ் இன்று பதவியேற்பு


சென்னை, 16 மே (ஹி.ச.)

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநராகபணியாற்றி வந்த வைத்திநாதன் மாற்றப்பட்டு டாக்டர் அ.அருண் தம்புராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

அவர் இன்று(மே 16) சென்னை தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற இவர் ஒரு மருத்துவர் ஆவார்.

மருத்துவப் படிப்பை முடித்த பிறகு, சிவில் சர்வீசஸ் தேர்வில் தீவிர கவனம் செலுத்தி, 2013-ம் ஆண்டு தேர்வில் இந்திய அளவில் 6-வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்தார்.

தன்னுடைய ஐஏஎஸ் பணியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். செய்தி மக்கள் தொடர்பு இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, சேலம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b