ஆவடியில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
திருவள்ளூர், 16 மே (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆவடி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவ
கைது


திருவள்ளூர், 16 மே (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஆவடி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பெரோஸ் அப்துல் கான் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், ஆவடி ஜே.பி.எஸ் எஸ்டேட் பகுதியில் பெருமளவில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது..

அதன்பேரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், கஞ்சா விற்பனையின் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.4 லட்சம் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில் அயப்பாக்கத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam