Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மே (ஹி.ச.)
தேர்தல் நேரத்தில் திமுக நிர்வாகிகளை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தவெக-வைச் சேர்ந்த 8 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த திமுகவினரை தாக்கியதாக கூறி, தவெக-வைச் சேர்ந்த ரதி, பாஸ்கர் உள்ளிட்ட 8 பேர் மீது ராயப்பேட்டை காவல் நிலையம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி பி. தனபால், மனுதாரர்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட 8 பேரும் அடுத்த 4 வாரங்கள் தினமும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் முன்அனுமதி இன்றி நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / P YUVARAJ