Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மே (ஹி.ச.)
சென்னை நீலாங்கரையில் முதலமைச்சர் விஜயை, மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்திப்புக்கு பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,
முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார்.
தமிழ்நாட்டை முன்னேற்றும் பல கனவுகளை விஜய் உற்சாகமாக பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்த் திரைப்படத் துறைக்கு அரசின் ஆதரவும் அரவணைப்பும் அவசியம் என வலியுறுத்திய கமல்ஹாசன், திரைத்துறை தொடர்பான 6 முக்கிய கோரிக்கைகளை முதலமைச்சரிடம் முன்வைத்ததாக கூறினார்.
விஜய் காட்டிய அன்பும் பண்பும் நெகிழ்ச்சியளித்ததாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam