Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மே (ஹி.ச.)
முதலமைச்சர் விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து தலைமைச் செயலகம் வரை தினமும் சுமார் 17 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வருகிறார்.
இதன் காரணமாக வழிநெடுகிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகுவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி வாகன அணிவகுப்பு செல்வதற்கென தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து சீராக நடைபெறவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் சிறப்பு மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய ஏற்பாடுகள் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பொதுமக்களின் சிரமங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam