சைக்கிளில் ரோந்து பணி செல்லும் ஜெய்ப்பூர் போலீசார்- நெட்டிசன்கள் விமர்சனம்
ஜெய்ப்பூர், 16 மே (ஹி.ச.) ராஜஸ்தானின் தலைநகரமான ஜெய்ப்பூரில் இரவுநேர ரோந்து பணியில் காவல்துறையினர் சைக்கிளில் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. எரிபொருள் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திய
Cycle


ஜெய்ப்பூர், 16 மே (ஹி.ச.)

ராஜஸ்தானின் தலைநகரமான ஜெய்ப்பூரில் இரவுநேர ரோந்து பணியில் காவல்துறையினர் சைக்கிளில் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

எரிபொருள் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திய நிலையில், அதனை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

சைக்கிளில் ரோந்து சென்ற காவலர்களை பார்த்த நெட்டிசன்கள்,

அவசர சூழ்நிலையில் குற்றவாளிகளை எப்படி விரட்டிப்பிடிப்பார்கள்?

இது பாதுகாப்பை விட விளம்பர நடவடிக்கையாக இருக்கிறதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மற்றொருபுறம், சிலர் இந்த முயற்சியை வரவேற்று, எரிபொருள் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இது ஒரு நல்ல முன்னுதாரணம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜெய்ப்பூர் காவல்துறையின் இந்த நடவடிக்கை தற்போது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P