தி.மு.க தேர்தல் தோல்வி எதிரொலி -அண்ணா அறிவாலயத்தில் 36 பேர் கொண்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை
சென்னை, 16 மே (ஹி.ச.) 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து ஆலோசிக்க, மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக்கிய ஆலோசனைக்
ஸ்டாலின்


சென்னை, 16 மே (ஹி.ச.)

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து ஆலோசிக்க, மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட 36 பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு, தேர்தல் தோல்விக்கான காரணங்கள், மாவட்ட வாரியான வாக்கு சரிவு, கூட்டணி கட்சிகளின் செயல்பாடு, பிரச்சாரங்களில் ஏற்பட்ட குறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P