சரிந்தது தங்கம் விலை- நகை பிரியர்கள் நிம்மதி..!
சென்னை, 16 மே (ஹி.ச.) சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச்
தங்கம்


சென்னை, 16 மே (ஹி.ச.)

சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. தொடர்ந்து தற்போது மே மாதம் தேர்தல் முடிந்த பிறகு சற்று சரிவை நோக்கி இருந்த தங்கம் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை, மாலை ஆகிய இரு வேலைகளிலும் தங்கம் விலை குறைந்தது. கடைசியாக 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.185 குறைந்து ஒரு கிராம் ரூ.14,765க்கும், சவரனுக்கு ரூ.1,480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,120க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது.

அதன் படி, கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,750க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P