எரிபொருள் சிக்கனம் — ஆளுநர் அர்லேக்கர் பாதுகாப்பு வாகனங்கள் 10-ல் இருந்து 4 ஆக குறைப்பு
சென்னை, 16 மே (ஹி.ச.) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை, அவரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆளுநர் அலுவல் நிகழ்ச்சிகள், அரசு மற்றும் தனியார் வ
Car


சென்னை, 16 மே (ஹி.ச.)

ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை, அவரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆளுநர் அலுவல் நிகழ்ச்சிகள், அரசு மற்றும் தனியார் விழாக்களில் பங்கேற்கச் செல்லும் போது மொத்தம் 10 காவல்துறை பாதுகாப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், நரேந்திர மோடி நாடு முழுவதும் மக்களிடம் விடுத்துள்ள “பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும்; பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும்” என்ற வேண்டுகோளை கருத்தில் கொண்டு, ஆளுநர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆளுநரின் பாதுகாப்பு அணிவகுப்பில் இடம்பெறும் காவல்துறை வாகனங்களின் எண்ணிக்கை தற்போது 10-ல் இருந்து 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் சிக்கனம் மற்றும் தேவையற்ற அரசுச் செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / P YUVARAJ