Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மே (ஹி.ச.)
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் சிஎஸ்கே கிரிக்கெட் லிமிடெட் இணைந்து, IPL 2026 போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்காக சிறப்பு மெட்ரோ பயண வசதிகளை அறிவித்துள்ளது.
சென்னையின் M. A. சிதம்பரம் மைதானத்தில் வரும் மே 18ஆம் தேதி நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் IPL லீக் போட்டியை முன்னிட்டு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
IPL போட்டிக்கான ஸ்பான்சர் செய்யப்பட்ட டிக்கெட்டுகளை வைத்திருக்கும் ரசிகர்கள், டிக்கெட்டில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை பயன்படுத்தி சென்னை மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம். இந்த சலுகை ஒரு சுற்றுப்பயணத்திற்கு பொருந்தும். சென்னையில் உள்ள எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையம் வரை கட்டணமின்றி பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், போட்டி முடிந்த பின் ரசிகர்களின் வசதிக்காக அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை நோக்கி செல்லும் கடைசி மெட்ரோ சேவை நள்ளிரவு 1 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பச்சை வழித்தட பயணிகள், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் மட்டுமே வழித்தட மாற்றம் செய்ய வேண்டும் என்றும், கடைசி ரயில் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 10 நிமிடங்களுக்கு முன்பாக நிலையத்திற்கு வருமாறும் சென்னை மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P