Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மே (ஹி.ச.)
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை தரமணியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,
200-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய செயலாளர் சண்முகம்,
பெட்ரோல், டீசல் மீதான மத்திய கலால் வரி மற்றும் மாநில வாட் வரியை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 500 ரூபாயாக நிர்ணயம் செய்து மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும்
எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறையை கைவிட்டு, மக்கள் நலன் சார்ந்த விலைக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கிறது. வாகன ஓட்டிகள், சிறு வியாபாரிகள், மீனவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்
என்று சண்முகம் தெரிவித்தார்.
விலை உயர்வை திரும்பப் பெறாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், விலை உயர்வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டு, கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் அளிக்க உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b