Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மே (ஹி.ச.)
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தென்மேற்கு பருவமழை வரும் மே 26-ஆம் தேதி வாக்கில் கேரளாவில் தொடங்குவதற்கான சாதகமான வானிலை சூழல் நிலவி வருகிறது.
இதன் தாக்கமாக, தமிழ்நாட்டிலும் அதே காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகும். ஆனால், இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே வரக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மே 24-ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வானிலை மாற்றங்கள் மற்றும் கடல்சார் சூழ்நிலைகள் சாதகமாக இருப்பதால், இந்த ஆண்டும் பருவமழை இயல்பை விட முன்பாகவே தொடங்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ