பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, 16 மே (ஹி.ச.) பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள பிஎம்ஸ்ரீ திட்டத்தில் “இந்துத்துவா” கருத்தியலும், சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழித் திணிப்பும் இடம்பெற்றுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த திட்டத்தை தமிழ்நா
கம்யூனிஸ்ட்


சென்னை, 16 மே (ஹி.ச.)

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள பிஎம்ஸ்ரீ திட்டத்தில் “இந்துத்துவா” கருத்தியலும், சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழித் திணிப்பும் இடம்பெற்றுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வரும் நிலையில், திட்டத்தை ஏற்க வேண்டும் என ஒன்றிய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும், இதன் காரணமாக சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கான நிதி வழங்கப்படாமல் இருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. தற்போது மாநில அரசு தனது சொந்த நிதியில் கல்வித்துறை பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 7ஆம் தேதி பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசும், பிஎம்ஸ்ரீ திட்டத்தை உறுதியாக நிராகரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P